kids story tamil

குழந்தைகளை வைத்துக்கொண்டு செய்யவேண்டாமே!

ஆன்லைன் வகுப்புக்கு போன் தேவை படுவதால் என் மகளுக்கு என் கைபேசியினை கொடுத்துவிட்டு ..எனக்கு புதிய போன் வாங்கிக்கொண்டேன் . பழைய போனில் இரண்டு சிம் கார்டுகள் இருந்ததால் ஆளுக்கு ஒன்று உபயோகித்து வந்தோம்.

ஒரு நாள் அலுவலகத்தில் இருக்கும்போது என் அண்ணன் போன் செய்து எதற்காக எனக்கு பணம் அனுப்பியிருக்கிறாய் என்று கேட்டார். எனக்கு ஒன்றுமே புரியவில்லை . நான் எதுவும் அனுப்பவில்லை என்று சொன்னேன். உன் போன் நம்பரில் இருந்துதான் எனக்கு ருபாய் 1234 வந்துள்ளது என்று சொல்லவே எனக்கு ஒன்றும் விளங்கவில்லை . அடுத்து என் தோழிக்கும் 1234 ருபாய் வந்துள்ளதாக போன் செய்தால்.

நீண்ட யோசனைக்கு பிறகுதான் எனக்கு உரைத்தது.ஆன்லைன் கிளாஸ் படித்துக்கொண்டே மகள் கூகிள் பேவில் 1234 விளையாடி கொண்டு இருக்கிறாள் என்று. வீட்டிற்கு போன் செய்து கேட்டால் அவள் வகுப்பு தானே கவனிக்கிறாள் என்று என் அம்மா அப்பாவியாக கூறினார் . அவளிடமிருந்து முதலில் போனை பிடுங்கி வை என்று சொல்லி ,அவசர அவசரமாக வீட்டுக்கு சென்று போனில் பார்த்தால்.பாரபட்சம் இல்லாமல் 1234 என நிறையபேருக்கு அனுப்பி வங்கி கணக்கினை துடைத்து வைத்து இருந்தால்.

பணம் பரிவர்த்தனை முடியும்போது ஒரு சவுண்ட் வரும் அது நன்றாக இருந்தது அதான் அனுப்பினேன் என்று அப்பாவியாக முகத்தினை வைத்து கொண்ட மகளினை என்ன செய்வதென்றே தெரியவில்லை .

பணத்தினை திருப்பி அனுப்பிவிட்டு சொந்தங்களும் நட்புகளும் இப்படியா குழந்தைக்கு வங்கி ரகசிய என்னெல்லாம் தெரியும்படி பணபரிவர்தனைகள் கொள்வது என்று மணிக்கணக்கில் அர்ச்சனை செய்ய ஆரம்பித்துவிட்டனர் .

உன் பொண்ணு நல்லவேளையாக 1234 என்று முடித்துக்கொண்டாள் 123456 என்று போய் இருந்தால் எங்களுக்கு எந்த பணமும் வரவில்லை என்று சொல்லியிருப்போம் என்று கிண்டல் வேறு செய்தனர்.

நாம் எவ்வளவுதான் மறைத்து மறைத்து ரகசிய எண்கள் போட்டாலும் நம் கைஅசைவினை வைத்தே இந்த காலத்து பிள்ளைகள் கண்டுபிடித்து விடுகிறார்கள் எனவே கூடுமானவரை வங்கியுடன் தொடர்புடைய எந்த கைபேசிகளையும் பிள்ளைகளிடம் கொடுப்பதினை தவிர்ப்பது மிகவும் நல்லது .

Tags: No tags